This item is sold by
Please sign in so that we can notify you about a reply
மூளைத் திறத்தையும் செயல் வேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து வெற்றிக் கோட்டைத் தொட்டுவிடத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.சிலர் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழிகளை நாடுவார்கள். இவர் வழி என்றுமே நேர்வழிதான். அமெரிக்க மண்ணில் பிறந்தாலும் அகில உலகிற்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் இவர்.தங்களது எதிர்காலத்தை வகுத்துக் கொள்ளும் திறமை இல்லாத பிள்ளைகள் தங்கள் பெற்றோர் சொற்படி நடக்கலாம். என் முன்னேற்றம் என் கையில்தான் இருக்கிறது என்று உறுதியாக நம்பும் பிள்ளைகள் பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டியதில்லை. பெற்றவர்கள் டெல்லை ஒரு மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். அவரோ வணிகம் செய்வதில் ஆர்வம் காட்டினார். அதில் வெற்றியும் பெற்றார். இளவயதிலேயே உலகக் கோடீஸ்வரரானவர்களின் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.பெற்றோர்கள் சொல்வதைப் பிள்ளைகள் கேட்க வேண்டுமா? அல்லது பிள்ளைகளின் விருப்பத்திற்குப் பெற்றோர் வழி விடுவதா? இதில் எது சரி என்று கேட்டால் இரண்டுமே சரி என்றுதான் சொல்லவேண்டும்.
Main features
Author:
Dr.M.Lenin
No posts found