எஸ். தேன்மொழியின் முதல் கவிதைத் தொகுப்பு இது.
கடலடி மௌனத்தைக் கலைத்துப்போடும் ஆயிரமாயிரம் உயிரினங்களில் ஒன்றான துறவி நண்டைப் போன்று சக வாழ்வில் பெண் உடலும் உணர்வும் நசுக்கப்படும்போது தன் மௌனத்தைக் கலைத்திடும் பெண்மொழிகள் இவை.
இருத்தலும் எடுத்தலும் கொடுத்தலும் ஆகிய அடிப்படை வாழ்வியல் செயல்பாடுகளை உணர்த்தும் இக்கவிதைகள், நிமிடத்துக்கு நிமிடம் பொங்கிவரும் அலைபோல நம்மிடம் பேசவருகின்றன - ஒன்றைப் போல் ஒன்றில்லாத புதிய தோற்றத்துடன். எளிமையும் யதார்த்தமும் நிறைந்த வரிகள், தீவிரப் பிரகடனமாகவும் வெளிப்படுகின்றன.
No posts found