துரத்தும் நிழல்களின் யுகத்தின் கவிதைக் குரல் சித்தாந்தனுடையது. போருக்கும் தோல்விக்கும் முன்னும் பின்னுமான ஈழப் பின்புலத்திலிருந்து வெளிப்படும் இந்தக் குரல் துயர் நிரம்பியது. தனிமை நிரம்பியது. தனிமையில்
துயரப்படும் எல்லாரையும் அல்லது துயரங்களால் தனிமைப்படும் எல்லாரையும் பிரதிநித்துவப்படுத்துவது. காற்று வெளியில் அர்த்தமற்று நிராதரவாய் அலையும்
மனிதர்களின் குரலை இந்தக் கவிதைகள் நிரந்தரப்படுத்துகின்றன. இவை நிகழ் காலத்தின் காயங்கள். நாளையின் எச்சரிக்கை வடுக்கள்.
No posts found