இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது.
பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக்கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக் கவிதைகள் பேசுகின்றன.
ஒரு நாள்வழிக் குறிப்பின் சாயலில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைகள் நிகழ்கால அவலம் பற்றிய மனச்சான்றின் வடுக்களாகின்றன.
No posts found