சமகாலக் கவிதையில் அபத்தங்களின் தரிசனத்தைத் துல்லியமாகச் சித்தரிக்கும் எழுத்துகள் இந்தத் தொகுதியில் உள்ளவை. அழகாகவும் எதிர்ப்பாகவும் வியப்பாகவும் சிக்கலாகவும் தனிமையாகவும் நமது காலத்தின் அபத்தம் உருவம் கொள்கிறது. 'வாசிக்கும்போதோ எழுதும்போதோ அல்லது சிந்திக்கும்போதோ ஒரு கவிஞன் கட்டாயம் மூட நம்பிக்கையில் வாழ்பவராக இருக்க வேண்டும்' என்று சொல்லிக்கொள்ளும் ராணிதிலக் இந்தக் கூற்றின் மூலம் கேள்விக்குட்படுத்துவது வாசகனின் இருப்பை; காலத்தின் நகர்வை.
No posts found