This item is sold by
Please sign in so that we can notify you about a reply
உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. மேட்டுக்குடி பானமான காப்பியை அனைவருக்குமானதாக மாற்ற நிகழ்ந்த சமூகநீதிப் போராட்டங்களை அறிவீர்களா? உண்ணும்போது ஒதுக்கி வைக்கும் குட்டியூண்டு கிராம்புதான் சுமார் மூன்று நூற்றாண்டுகள் உலகையே இயக்கியது என்றால் நம்ப முடிகிறதா? பன்றிகளுக்கான உணவாக இருந்த நிலக்கடலை மனிதர்களுக்கான மகத்துவ உணவாக மாறிய கதை வேண்டுமா? ஏவாளைத் தூண்டிய பாவத்தின் கனி மாதுளையா? தர்பூசணி என்பது இனவெறியின் அடையாளமாக இருந்த சரித்திரம் தெரியுமா? தெருக்கள்தோறும் ஆயாக்கள் சுடும் சர்வதேச உணவு எது? சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த பிரியாணியின் செய்முறை என்ன? உணவின் சரித்திரத்தில் சுவாரசியப் புதையல்கள் ஏராளம். உணவை நோக்கிய தேடல்களினால்தாம் நாகரிக வளர்ச்சி தொடங்கி காலனியாதிக்கப் பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. ருசியான பக்கங்களைப் போலவே கருப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் செல்லும் இந்த நூல், கமகமக்கும் உணவினைவிட, அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது. |
Main features
Author:
Mugil
No posts found