This item is sold by
Please sign in so that we can notify you about a reply
தமிழக வரலாறு, வரலாற்றுப் பாதுகாப்பு, ஐரோப்பியத் தமிழியல்,"தமிழ்ப் பண்பாட்டு தேடல்கள், தமிழ் மக்கள் புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப் பன்முகத் தேடல்களுடன் இயங்கி வரும் முனைவர்.க.சுபாஷிணியின் தொல்லியல் அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல் இது. 'உலக நாகரிகங்களின் வரிசை' என்ற பொருளில் இந்த நூல் அடங்குகின்றது. தமிழின் தொன்மைக்குப் பெருமை சேர்க்கும் கீழடி அகழாய்வுச் செய்திகளை எளிய முறையில் இளம் சிறார்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் படைக்கப்பட்டூள்ளது. முனைவர்.க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவராகவும் 'கடிகை' தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநராகவும் செயல்படூகின்றார். ஒரு பன்னாட்டு கணினி வர்த்தக நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினி பொறியியல் நிர்வாகப் பிரிவின் பொறுப்பாளராக பணிபுரியும் இவர் உலகளாவிய வகையில் அருங்காட்சியகங்கள், வரலாறு, தொல்லியல் அகழாய்வு ஆகிய துறைகளிலும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். தொல்லியல் அகழாய்வு பற்றிய செய்திகளும் தக்க தரவுகளுடன் கூடிய தமிழர் வரலாறும் குழந்தைகளுக்கும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூல் வெளிவருகின்றது.
Main features
Author:
K.Subashini
No posts found