Please sign in so that we can notify you about a reply
1981 முதல் 1987வரை சுப. உதயகுமாரன் எத்தியோப்பியாவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது நிகழ்ந்த தகராறு அனுபவங்களின் தொகுப்பு.
கூடங்குளம் போராட்ட ஒருங்கிணைப்பாளராக நன்கு அறியப்பட்ட சுப. உதயகுமாரனின் இளமைக்கால எத்தியோப்பிய அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இந்நூல். இளமையின் வாயிலில் நின்றுகொண்டு சமூகத்தில் நேரிடும் இன்னல்களை, மனிதர்கள் அனுபவிக்கும் துயரங்களை மாற்றத் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்ட உதயகுமாரனின் வாழ்க்கைச் சம்பவங்களின் ஒரு பகுதி இந்நூல்.
அவரை ஓர் ஆளுமையாக மாற்றும் வல்லமை கொண்டவையாக அமைந்திருக்கின்றன எத்தியோப்பியாவில் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் என்பதை அக்கறையோடு இந்நூலை வாசிக்கும் வாசகன் உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட தகராறுகளைக் கையாண்ட அனுபவங்களைத் திறந்த மனத்துடன் சமூகத்தின்முன் வைப்பதன் மூலம் மனிதர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஓர் உபாயம் அமைந்துவிடாதா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே இந்நூல்.
No posts found